தினம் ஒரு திருப்பாவை ... பாசுரம் 8!
மார்கழி 8ம் நாள்... திருப்பாவை ... பாசுரம் 8
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
பொருள் விளக்கம்:
மல்லர்களை வென்ற மாயவன்!
மகிழ்ச்சியைச் சொத்தாகக் கொண்டவளே, அழகுச் சிலையே, இன்னும் தூங்கலாமா? கிழக்கே வெளிச்சம் பரவத் தொடங்கிவிட்டது. எருமைகள் மேய்ச்சலுக்காக புல்வெளிகளில் நிற்கின்றன. பெண்கள் எல்லோரும் நீராட வரிசை கட்டி வந்துவிட்டார்கள். உடனே குளிக்க வேண்டும் என அவர்கள் அவசரப்படுகிறார்கள். இருந்தும் உனக்காக காத்து நின்று உன்னை அழைக்கிறோம்.
கேசி என்ற அரக்கன் குதிரை வடிவில் வந்தான். அவன் வாயைப் பிளந்து கண்ணன் அவனை வீழ்த்தினான். கம்சன் அனுப்பிய முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களையும் அவன் வென்றான். தேவாதி தேவனாக விளங்கும் கண்ணன் அவன். அவன் வீரமும் கருணையும் ஒன்றாகச் சேர்ந்து நிற்கின்றன.
அந்த கிருஷ்ணனை நாம் வணங்கினால் அவன் அருள் பொழிவான். “ஆஆ” என்று அன்புடன் அழைத்து நம்மை ஏற்றுக் கொள்வான். பெண்ணே, இனியும் தாமதம் வேண்டாம். உடனே எழுந்து கிளம்பு. இந்த இனிய காலையை தவற விடாதே.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!