தைப்பூசம்... திருத்தணியில் வாகனங்களுக்கு தடை!
திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படுகிறது. தினமும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இதனால் திருத்தணி கோவிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.
இந்த நிலையில் நாளை மறுநாள் (1-ந்தேதி) தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமி தரிசனம் நடைபெறுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், மலர் காவடி, மயில் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். சண்முக கடவுளுக்கு காவடி மண்டபத்தில் பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.
தைப்பூச நாளில் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் திருத்தணிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதையடுத்து தைப்பூசத்தன்று ஆட்டோ, பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மலைக்கு செல்ல அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் வசதிக்காக இலவச பஸ்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!