திருவண்ணாமலையில் அதிகாலையில் பரணி தீபம்... கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள் வெள்ளம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்ட சிறப்புத் தருணத்தை காண பக்தர்கள் பெரும்தொகையில் திரண்டு வருவது நேரலையில் காணப்பட்டு வருகிறது. கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பரணி தீபம் இன்று அதிகாலை 4 மணிக்கு சுவாமி சன்னதி கருவறை எதிரே ஏற்றப்பட்டது.
மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலைச்சிகரத்தில் மகாதீபம் ஏற்றப்பட இருக்கிறது. இதனை நோக்கி கோடிக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையை நோக்கி வருகை தரும் நிலையில், அதிகாலை முதலே கோயில் சுற்றுப்பகுதி மக்கள் வெள்ளமாக வழிந்தது.
அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் அதிகாலை நடைபெற்ற பரணி தீப நிகழ்வில் கலந்து கொண்டார். பரணி தீபத்தையும், மாலை நடைபெறும் மகாதீபத்தையும் தரிசிக்க வருவோர் எண்ணிக்கை லட்சங்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டதால், 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்கு முன் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!