மலை உச்சியில் 10 வது நாளாக கொழுந்து விட்டு எரியும் அண்ணாமலையார் மகா தீபம்!
திருவண்ணாமலையில் உலகப் புகழ்பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்தக் கோவிலில் நடைபெறும் முக்கிய விழா கார்த்திகை தீபத் திருவிழா ஆகும். கடந்த மாதம் கொடியேற்றத்துடன் இந்தத் திருவிழா தொடங்கியது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சி மகா தீபமாகும். கடந்த 3-ம் தேதி கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மலையின் உயரம் 2,668 அடி ஆகும். இந்த மகா தீபத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர். இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தற்போது 10-வது நாளாக மகா தீபம் சுடர் விட்டு எரிந்து வருகிறது. கடும் குளிர் மற்றும் பலத்த காற்றிலும் தீபம் அணையாமல் எரிவது பக்தர்களுக்கு ஆச்சரியம் அளித்தது. இன்று சூரிய உதயத்தின்போது அண்ணாமலையார் ஜோதி வடிவில் காட்சி கொடுத்தார். பக்தர்களுக்கு இது பக்திப் பரவசத்தை ஏற்படுத்தியது. மகா தீபக்காட்சி நாளையுடன் (சனிக்கிழமை) நிறைவு பெறுகிறது. அதன்பிறகு மலை உச்சியில் இருந்து தீபக்கொப்பரை இறக்கப்படும். அதில் இருந்து எடுக்கப்படும் மை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!