மரணத்திலும் பிரியாத ஆதர்ச தம்பதி... கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் மயங்கி சரிந்து உயிரிழப்பு! 

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பாலையக்கோட்டை கிராமத்தில், 52 ஆண்டுகாலத் தம்பதி ஒருவரின் பிரிவு, அந்த ஊர் மக்களையே கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது. திமுக முன்னாள் அவைத் தலைவரான காளிமுத்து (80) மற்றும் அவரது மனைவி தனலெட்சுமி (74) ஆகிய இருவரும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு நிழல் போல இணைந்தே வாழ்ந்து வந்தனர். மூன்று மகன்கள், மருமகள்கள் எனப் பெரிய கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்த இவர்களது பிணைப்பு, மரணத்திலும் பிரியவில்லை என்பதுதான் அனைவரையும் உலுக்கியுள்ளது.

இதய நோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த காளிமுத்து, நேற்று மதியம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு உறவினர்கள் கதறித் துடித்தனர். இறுதிச் சடங்கிற்காகக் காளிமுத்துவின் உடலைக் குளிப்பாட்டி, கூலர் பாக்ஸில் வைக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது, தனது கணவரின் பிரிவைத் தாங்க முடியாத தனலெட்சுமி, திடீரென நிலைகுலைந்து மயங்கி விழுந்து அங்கேயே உயிர் துறந்தார்.

கணவர் இறந்த ஒரு மணி நேரத்திலேயே மனைவியும் உயிர்விட்ட இந்தச் சம்பவம், "ஈருடல் ஓருயிர்" என்பதற்குச் சான்றாக அமைந்துவிட்டது. இன்று ஒரே இடத்தில் இருவரது உடல்களும் தகனம் செய்யப்பட்டபோது, அந்தப் பகுதி மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். வாழ்நாள் முழுவதும் இணைந்திருந்தவர்கள், விண்ணுலகிற்கும் ஒன்றாகவே சென்றது பாலையக்கோட்டை கிராமத்தில் பெரும் சோகத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!