இது திமுகவிற்கு பொருந்தா கூட்டணி தான்... நயினார் நாகேந்திரன் பதிலடி!
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது குறித்து புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட பாஜக மாநிலத்தலைவர் நயினார் நகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் இந்த கூட்டணிதான் மக்களோடு மக்களாக நின்று உங்கள் கூடாரத்தையே விரட்டியடிக்கப் போகிறது. நம்மைப் பார்த்து “பொருந்தாக் கூட்டணி” என்கிறார்களாம் சில திமுக ஏஜென்ட்டுகள். ஆம்! இது திமுகவுக்கு பொருந்தாக் கூட்டணிதான். ஏனென்றால், இந்த கூட்டணிதான் மக்களை சுரண்டிக் கொழுக்கும் மு.க.ஸ்டாலினின் அவல ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகிறது. இந்த கூட்டணிதான் தமிழக பெண்களின் மாண்பை கழுவிலேற்றிய கயவர்களை அமைச்சர்களாகக் கொண்ட ஒரு கேடு கெட்ட ஆட்சியை வேரறுக்கப் போகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!