"இது தமிழ்நாடா... இல்லை கொலைநாடா..?" - அரசு வழக்கறிஞர் படுகொலை குறித்து இ.பி.எஸ். ஆவேசம்!
"தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமி வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. குற்றச் சம்பவங்களில் நம்பர் 1 மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றியதுதான் ஸ்டாலின் மாடல் அரசின் சாதனை" என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.
தென்காசி அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமி படுகொலை செய்யப்பட்டது குறித்துத் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி, மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பினார்.
அவர் தனது பதிவில், "பட்டப்பகலில் அரசு வழக்கறிஞரின் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதோடு, உயிருக்கு பயந்து ஓடிய அவரை வீதிகளில் ஓட ஓட விரட்டிச்சென்று படுகொலை செய்துவிட்டுத் தப்பியிருக்கிறது. இது தமிழ்நாடா... இல்லை கொலைநாடா?"
இந்தச் சம்பவம் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கின் உண்மை நிலையைக் கண்முன் நிறுத்தியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். "குற்றச் சம்பவங்களில் நம்பர் 1 மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றியதுதான் இந்த 'ஸ்டாலின் மாடல் அரசின் சாதனை' என விளம்பரப்படுத்த வேண்டியது தானே முதல்வரே?"
சாலைகள் மற்றும் நீதிமன்ற வளாகங்கள் என எங்கும் கொலைகள் நடப்பதாகவும், சிறுமி முதல் முதியோர் வரை, அரசு மருத்துவர் முதல் அரசு வழக்கறிஞர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழல் தமிழ்நாட்டில் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டம் - ஒழுங்கை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, மக்கள் அச்ச உணர்வுடன் வாழ வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திய 'பொம்மை முதல்வருக்கு' தனது கடும் கண்டனங்களைத் தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தென்காசி அரசு வழக்கறிஞர் படுகொலை சம்பவம் குறித்து, உடனடியாக உரிய விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளைச் சட்டத்தின் முன்பு நிறுத்தி, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!