undefined

தொடர்ந்து 2வது மாதமும் குறைவு.. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில், நவம்பர் மாதத்தைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்திலும் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டுச் சிலிண்டரின் விலை ரூ. 10.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இதன் புதிய விலை ரூ. 1,739.50-க்கு (ஆயிரத்து எழுநூற்று முப்பத்து ஒன்பது ரூபாய் ஐம்பது காசுகள்) விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பால், கடைகள் மற்றும் உணவகங்களில் சிலிண்டரைப் பயன்படுத்தும் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையைப் போலவே, மற்ற மெட்ரோ நகரங்களான தில்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களிலும் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வீட்டில் பயன்படுத்தப்படும் (14.2 கிலோ எடை கொண்ட) வீட்டு உபயோகச் சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்தச் சிலிண்டர் விலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் எவ்வித மாற்றமும் இன்றி, ரூ. 868 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!