undefined

அறநிலையத் துறையைச் சுரண்டிக் கொண்டிருப்பவர்கள்  சிறைக்குச் செல்வது உறுதி... அண்ணாமலை ஆவேசம்!
 

 

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையைச் சுரண்டிக் கொண்டிருப்பவர்கள்  சிறைக்குச் செல்வது உறுதி என பாஜக தலைவர் அண்ணாமலை பரபர பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலில், சமீபத்தில் பக்தர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், சில வாரங்களுக்கு முன்பு, பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வைத்து அவதிப்பட்டதாக வீடியோ வெளியாகியுள்ளது.  மேலும், திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர்கள், சிறப்பு தரிசனம் என்ற பெயரில் நபருக்கு தலா ரூ.1000 முதல் ரூ.5000 வரை வசூல் செய்து மோசடி செயலில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகிறது. திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு நடக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

 

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுக, தனது ஊழலை மக்கள் மத்தியில் வெளிப்படுத்துபவர்கள் மீது, காவல்துறையையோ, குண்டர்களையோ ஏவுவது வழக்கமாகி இருக்கிறது. திமுக அரசின் இந்த அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழகத்தில்   2026 ம் ஆண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்போது, இந்து சமய அறநிலையத் துறையைச் சுரண்டிக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவரும், சிறைக்குச் செல்வது உறுதி" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?