"நாய்க்கடிக்கு உணவளிப்பவர்களே பொறுப்பு!" - உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!
தெருநாய்கள் கடித்துப் பொதுமக்களும், குழந்தைகளும் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு சில அதிரடியான கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
பொது இடங்களில் தெருநாய்களுக்கு உணவளிப்பவர்கள்தான், அந்த நாய்கள் யாரையாவது கடித்தால் அதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும். "நாய்கள் மீது அவ்வளவு அக்கறை இருந்தால், அவற்றை உங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கேயே உணவளியுங்கள்" என நீதிபதி காட்டமாகத் தெரிவித்தார்.
நாய்க்கடி பாதிப்புகளைத் தடுக்க மாநில அரசுகள் மெத்தனமாகச் செயல்படுவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், "இனி நாய்க்கடியால் ஏற்படும் ஒவ்வொரு மரணம் அல்லது காயத்திற்கும் மிகப்பெரிய தொகையை இழப்பீடாக வழங்க உத்தரவிடுவோம்" என எச்சரித்தனர்.
மாநில அரசுகளிடம் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க ஏதேனும் முறையான செயல் திட்டம் உள்ளதா என்பதை அறிய ஜனவரி 20-ஆம் தேதி அரை நாள் முழுவதும் இதற்காக ஒதுக்கி விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த 'விலங்கு பிறப்பு கட்டுப்பாடு' விதிகள் இருந்தாலும், அவை முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்பதே சமூக ஆர்வலர்களின் புகாராக உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தலையீடு, தெருநாய்களுக்கு உணவளிக்கும் நபர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பெரும் பொறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!