undefined

டிசம்பர் 16 முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள்  விண்ணப்பிக்கலாம்! 

 
 

வாக்காளர் பட்டியல் திருத்தம் தீவிரம்… நாளையுடன் கணக்கீட்டு காலம் நிறைவு

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நடப்பு கணக்கீட்டு காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து, வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 16-ந்தேதி வெளியிடப்படும். இந்த திருத்தப் பணிகள் 27.10.2025 அன்று அறிவிக்கப்பட்டதிலிருந்தே, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒவ்வொரு கட்டத்திலும் பங்கேற்று வருகின்றனர்.

வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு திரும்ப பெறப்படாத கணக்கீட்டு படிவங்களின் விவரங்கள், வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய, வாக்காளர் பதிவு அலுவலர் நிலையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. முகவரியில் இல்லாதவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், இரட்டைப் பதிவுகள் உள்ளிட்ட காரணங்களுடன் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பட்டியல் கணக்கீட்டு காலம் முடிந்த பின் இறுதிப்படுத்தப்படும்.

எனவே, வாக்காளர்கள் தங்கள் கணக்கீட்டு படிவங்களை கடைசி தேதிக்காக காத்திருக்காமல் விரைந்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் சமர்ப்பிக்கும் காலம் 16-ந்தேதி முதல் ஜனவரி 15-ந்தேதி வரை நடைபெறும். இந்த காலத்தில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் செய்யலாம். எந்த தகுதியான குடிமகனும் விடுபடாமல், தகுதியற்றவர்கள் சேர்க்கப்படாமல் நடவடிக்கை எடுக்க வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் வலியுறுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!