ஆயிரக்கணக்கில் குவிந்த சுற்றுலா பயணிகள்... குமரியில் படகு சேவை நேரம் நீட்டிப்பு!
தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். குமரியில் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் குவிந்து வரும் நிலையில், விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை படகு சேவை நடைபெறும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பொங்கல் விடுமுறையால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் செல்ல குகன், பொதிகை, விவேகானந்தா என மூன்று படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகு சேவை நடைபெறும். நபர் ஒருவருக்கு ரூ.100 கட்டணமாகவும், மாணவர்களுக்கு ரூ.40 சலுகைக் கட்டணமாகவும், சிறப்புக் கட்டணமாக ரூ.300 வசூலிக்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கூடுதல் நேரம் படகு சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று ஜனவரி 17ம் தேதி காணும் பொங்கலை முன்னிட்டு அதிகாலை 6.45 மணிக்கு டிக்கெட் விநியோகம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!