undefined

பிளஸ்-2 மாணவிக்கு முத்தம் கொடுத்து வீடியோ எடுத்த வாலிபர்.. தொடர்ந்து  மிரட்டி வந்த நிலையில் போக்சோவில் கைது!

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பிளஸ்-2 படித்து வந்த 17 வயதுச் சிறுமியை, திருமணம் ஆன ஒரு வாலிபர் காதலிப்பதாகக் கூறித் தொல்லை கொடுத்ததுடன், முத்தம் கொடுத்து அதை ரகசியமாகப் படம் எடுத்து மிரட்டிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில், போலீசார் அந்த வாலிபரைக் கைது செய்தனர்.

சிவகாசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி ஒருவர், அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். அவருடைய தாயார் அரசு துறையில் பணிபுரிகிறார். மாணவியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி உள்ளார். இந்த நிலையில், மாரிமுத்து ஒரு வருடத்திற்கும் மேலாகச் சிறுமியைத் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்து, காதலிப்பதாகக் கூறித் தொல்லை கொடுத்துள்ளார்.

மாணவி மட்டும் தனியாக வீட்டில் இருக்கும் நேரத்தைப் பார்த்து மாரிமுத்து வீட்டுக்குள் சென்றுள்ளார். ஒரு நாள் திடீரென மாணவியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மாரிமுத்து, அதை ரகசியமாகப் படம் எடுத்துள்ளார். பின்னர், அந்தப் படத்தை வைத்து மாணவியைத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

சம்பவத்தன்று வேலை முடிந்து மாணவியின் தாயார் வீட்டுக்கு வந்த போது, அங்கே மாரிமுத்து இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அவரிடம் தகராறு செய்தார். தாயார் விசாரித்த போது தான், மிரட்டல் விவகாரம் குறித்து மாணவி அழுது கொண்டே தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மாணவியின் தாயார் உடனடியாகச் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி, பிளஸ்-2 மாணவியைத் தொல்லை கொடுத்து மிரட்டிய திருமணமான வாலிபர் மாரிமுத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்தக் கைது சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!