undefined

2 கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - தந்தை, மகன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!

 

ராமநாதபுரம் மாவட்டம் கானா விலக்கு - பெருநாழி சாலையில் பரளச்சி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்திற்குள்ளானதில் தந்தை, மகன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பரளச்சி அருகே சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒரு இருசக்கர வாகனம் குறுக்கே வந்துள்ளது. அந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்கக் காரைத் திருப்ப முயன்றபோது, எதிரே வந்த மற்றொரு காருடன் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் விருதுநகரைச் சேர்ந்த சோலையப்பன் மற்றும் அவரது மகன் சோலைச்செல்வம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த சோலையப்பனின் மனைவி விஜயலட்சுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. விபத்து குறித்துத் தகவல் அறிந்து வந்த போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்குக் காரணமான மற்றொரு கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!