undefined

அதிர்ச்சி.. நேருக்கு நேர் மோதிக்கொண்ட இருசக்கர வாகனங்கள்.. மூன்று பேர் பரிதாப பலி..!!

 

இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

ராணிப்பேட்டை மாவட்டம், லாலாப்பேட்டையைச் சேர்ந்தவர் சரத்பாபு (40). இவர் தனது நண்பர்கள் 2 பேருடன் லாலாப்பேட்டையில் இருந்து அம்மூருக்கு ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அம்மூரை சேர்ந்த அருண்குமார் என்ற 16 வயது சிறுவன் தனது சகோதரியை கல்லூரியில் விடுவதற்காக பைக்கில் லாலாப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

வானபாடி கிராமம் அருகே வேகமாக வந்த இரு பைக்குகளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் அருண்குமார், சரத்பாபு மற்றும் அவரது நண்பர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த அருண்குமாரின் சகோதரி வைஷ்ணவி, ஆனந்தன் ஆகியோரை உடனடியாக மீட்டு அவசர சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், சாலையில் கிடந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து ராணிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!