காவல்துறையில் 3 உட்கோட்டங்கள், 10 காவல் நிலையங்கள் ... டிசம்பர் 22ல் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு !
தமிழ்நாடு காவல்துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 3 சப்-டிவிஷன்கள் மற்றும் 10 புதிய காவல் நிலையங்களை முதல்-அமைச்சர் வரும் 22-ம் தேதி தொடங்கி வைக்கிறார். சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு காவல் சேவை இன்னும் விரைவாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய உட்கோட்டங்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி, நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் குற்றத்தடுப்பு, விசாரணை மற்றும் காவல் கண்காணிப்பு பணிகள் மேலும் எளிதாகும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், நாமக்கல் மாவட்டம் கொக்கராயன் பேட்டை, தர்மபுரி புளிக்கரை, சிவகங்கை கீழடி, கள்ளக்குறிச்சி களமருதூர், திருவண்ணாமலை கோவில் காவல் நிலையம், மதுரை மாநகரில் சிந்தாமணி மற்றும் மாடகுளம், கோயமுத்தூர் மாவட்டம் நீலாம்பூர், நெல்லை மாநகரம் மேலவாசல், திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் தொடங்கப்படுகின்றன. இதனால் காவல் துறையின் அணுகுமுறை மக்களுக்கு இன்னும் நெருக்கமாகும் என நம்பப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!