undefined

 தெருநாய்கள் கடித்து குதறியதில் 3 வயது சிறுவன் துடிதுடித்து பலி...  வீட்டு வாசலில் விளையாடிய போது பெரும் சோகம்! 

 

இந்தியாவின் பல பகுதிகளில் வெறிநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தபோதிலும் அடுத்தடுத்த சம்பவங்கள் நிகழ்ந்து பொதுமக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி  வருகின்றன.

அந்த வகையில் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெருநாய்கள் கடித்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் மான்ஸர் பகுதியில் வசித்து வந்த 3 வயது சிறுவன் ஆயுஷ்  வீட்டிற்கு வெளியே தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு கூட்டமாக வந்த தெரு நாய்கள் ஆயுஷை சராமாரியாக கடித்து குதறியதில்  சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து உடனடியாக  உரிய விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது