undefined

 தாய்க்குக் கல்லை தூக்கிப் போட்ட மகள், மருமகன்... சொத்துக்காகக் கொடூரக் கொலை! 

 
 

திருப்பத்தூர் மாவட்டம், புதூர் நாடு மலைப் பகுதியில் உள்ள நடுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னகாளி (45). இவரது கணவர் இறந்த பிறகு, இளைய மகள் கீதா, தன் கணவர் சிதம்பரத்துடன் தாய்க்குத் துணையாக அதே வீட்டில் வசித்து வந்தார். வனத்துறை சார்பில் வழங்கப்பட்ட 6 ஏக்கர் நிலம் சின்னகாளி பெயரில் இருந்தது. அந்தச் சொத்தையும் தன் பெயருக்கு எழுதித் தருமாறு மகள் கீதா தாயிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

ஆனால், சின்னகாளி இதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், அந்தச் சொத்தை தன் கள்ளக்காதலனுக்குக் கொடுக்கத் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கீதா, "இந்தச் சொத்தை நான் சாகும் வரை யாருக்கும் தர மாட்டேன்" என்று தாய் கூறியதால் கடும் கோபத்தில் இருந்தார். மேலும், இந்தச் சொத்தில் மூத்த மகளுக்கும் பங்கு உண்டு என்று சின்னகாளி தெரிவித்ததால், கீதாவும் அவரது கணவர் சிதம்பரமும் சேர்ந்து தாயைக் கொலை செய்யத் திட்டமிட்டனர்.

திட்டப்படி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன், "மருமகன் எங்கோ போய்விட்டார் வா தேடி கூட்டிட்டு வரலாம்" என்று கூறித் தாய் சின்னகாளியைக் காட்டிற்குள் அழைத்துச் சென்றார் மகள் கீதா. அங்கு மறைந்திருந்த மருமகன் சிதம்பரம், சொத்து குறித்து வாக்குவாதம் செய்து, கல்லைத் தூக்கி சின்னகாளியின் தலையில் பலமாகத் தாக்கிக் கொன்றார். பின்னர், கொலையை மறைக்க, சின்னகாளியின் ஆடைகளைக் களைந்து, கள்ளக்காதலன் கற்பழித்துக் கொலை செய்தது போல நாடகமாடினர். போலீசார் உடலைக் கைப்பற்றி நடத்திய பிரேதப் பரிசோதனையில் கற்பழிப்பு நடக்கவில்லை என்பது உறுதியானது. தீவிர விசாரணையில், சொத்துக்காகக் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தாயைக் கொன்றது அம்பலமானது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!