முதல் பாதி ஸ்லோ... 2ம் பாதி வன்முறை... பழிவாங்கல்.. Thug Life ஆடியன்ஸ் ரியாக்ஷன் என்ன?!
அதே கேங்ஸ்டர் படம். அதே பழிவாங்கல் கதை. மணிரத்னமும், கமலும் நீண்ட இடைவெளிக்குப் பின் இணைந்திருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், முதல் காட்சி படம் பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்.
பெரும்பாலான ரசிகர்கள் சிறுத்தை சிவா படத்திற்குள் நுழைந்துவிட்டதைப் போல உணர்ந்ததாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டிருக்கிறார்கள். படத்தில் சிம்புவின் நடிப்பு அப்ளாஸை அள்ளுகிறது. கமல் - மணிரத்னம் காம்போவில் நாயகன் மாதிரியான படத்தை எதிர்பார்த்து செல்பவர்களுக்கு ஏமாற்றமே என்பது பெரும்பாலான பெண் ரசிகைகளின் கருத்துக்களாக இருக்கிறது.
மணிரத்னம் இயக்கம், கமல், சிம்பு, ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அசோக் செல்வன் என நட்சத்திரக்கூட்டம். ஒவ்வொருத்தருக்குமான கேரக்டர் என்னவாக இருக்கும்? த்ரிஷா யாருக்கு ஜோடி, ஏ.ஆர்.ரஹ்மான் மேஜிக் என்ன என்று பயங்கர எதிர்பார்ப்புகளுடன் தியேட்டருக்குள் நுழைந்த ரசிகர்கள் அடுத்தடுத்த கேங்ஸ்ட்ர், பழிவாங்கல் என்று வழக்கமான பாதையில் படம் பயணிப்பதால் ஏமாற்றத்திற்குள்ளானதாக தெரிவித்து வருகின்றனர்.
படத்தின் முதல் பாகம் மிகவும் மெதுவாக நகர்வதாகவும், இரண்டாம் பாகம் வழக்கம் போல் அதிக சண்டைக் காட்சிகளுடன் இருப்பதாகவும் கருத்து தெரிவிப்பவர்கள், அதே சமயம் இந்த படத்தில் நீண்ட நாட்களுக்குப் பின் ரஹ்மானின் மேஜிக் நிகழ்ந்திருக்கிறது என்பதையும் குறிப்பிட தவறவில்லை. குறிப்பாக பின்னணி இசையில் ரஹ்மான் ஆள்கிறார்.படத்தை சிம்புவின் கதாபாத்திரம் தூக்கி நிறுத்துவது ஆறுதலாக இருப்பதாகவும், நாயகன் அளவுக்கு கமலின் கதாபாத்திரம் வலுவாக இல்லாதது ஏமாற்றமே என்றும் ரசிகர்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!