மார்கழி முழுவதும் அதிகாலை 3 மணிக்கு திருச்செந்தூர் முருகன் கோவில் நடை திறப்பு!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் கோவில் நடை திறக்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகக் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுவாக அதிகாலை 5 மணிக்குத் திறக்கப்படும் நடை, மார்கழி மாதம் முழுவதும் முன்கூட்டியே திறக்கப்பட உள்ளது.
மார்கழி மாதம் முதல் நாளான டிசம்பர் 16-ஆம் தேதி முதல் மார்கழி 30-ஆம் தேதியான ஜனவரி 14-ஆம் தேதி வரை கோவில் நடை திறப்பு நேர மாற்றம் அமலில் இருக்கும். இந்த நாட்கள் முழுவதும் கோவில் நடை அதிகாலை 3 மணிக்குத் திறக்கப்படும்.
3:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 4:45 முதல் 5:00 மணிக்குள் உதய மார்த்தாண்ட தீபாராதனை, 5:00 மணிக்குத் திருப்பள்ளி எழுச்சி தீபாராதன. அதன் பிறகு அடுத்தடுத்த கால பூஜைகள் நடைபெறும்.
சிறப்புத் தினங்களில் மாற்றம்:
ஜனவரி 1 (ஆங்கிலப் புத்தாண்டு): ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அன்றைய தினம் கோவில் நடை அதிகாலை 1 மணிக்கே திறக்கப்பட உள்ளது.
ஜனவரி 3 (ஆருத்ரா தரிசனம்): மார்கழி 19-ஆம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அன்றைய தினம் கோவில் நடை அதிகாலை 2 மணிக்குத் திறக்கப்பட உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!