திருப்பதியில் நாளை மறுநாள் முதல் ஆன்லைன் முன்பதிவு செய்த அன்றே தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு, ஸ்ரீவாணி டிரஸ்ட் தரிசன டிக்கெட்டுகளுக்கு ஆன்லைன் முன்பதிவு முறையை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நாளை மறுநாள் முதல் சோதனை அடிப்படையில் அமலுக்கு வருகிறது.
தற்போது திருமலையில் கவுண்ட்டர்களில் வழங்கப்பட்டு வந்த 800 ஸ்ரீவாணி டிரஸ்ட் பிரேக் தரிசன டிக்கெட்டுகள், இனி ஆன்லைன் புக்கிங் மூலம் வழங்கப்படும். ஏற்கனவே 3 மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட 500 ஆன்லைன் டிக்கெட் கோட்டாவுக்கு மேலாக, இந்த புதிய டிக்கெட்டுகளும் வழங்கப்பட உள்ளன.
தினமும் காலை 9 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டு, மதியம் 2 மணி வரை முன்பதிவு செய்யலாம். அதே நாளில் மாலை 4 மணிக்கு பக்தர்கள் திருமலையில் தரிசனத்திற்கு வர வேண்டும். இந்த ஆன்லைன் முறை ஒரு மாதம் சோதனைக்காக நடைமுறைப்படுத்தப்படுகிறது. நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க, பக்தர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!