திருப்பதி ஏழுமலையான் ஏப்ரல் மாத தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு!
திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் அறிவித்தது: ஏப்ரல் மாத தரிசன சேவைகள் டிக்கெட்டுகள் இன்று (19.01.26) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டு, ஜனவரி 21ம் தேதி காலை 10 மணி வரை மின்னணு குலுக்கல் மூலம் பதிவு செய்யலாம். சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவைகள் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கு இதன் கீழ் டிக்கெட்டுகள் கிடைக்கும். குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் ஜனவரி 21-23ம்தேதி மதியம் 12 மணி வரை பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெறலாம்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்காரம் மற்றும் வசந்தோற்சவம் சேவைகளுக்கான டிக்கெட்டுகள் 22ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் கிடைக்கும். அதே நாளே பிற்பகல் 3 மணிக்கு சாமி தரிசனத்திற்கான நேரடி டிக்கெட்டுகள் வெளியிடப்படும். அங்கபிரதட்சனம், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் 23ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு இலவச சிறப்பு தரிசன டோக்கன்களை பெறலாம்.
ரூ.300 சிறப்பு நுழைவு டிக்கெட்டுகள் 24ம் தேதி காலை 10 மணிக்கு, திருமலை-திருப்பதி அறைகள் 24ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். மார்ச் மாத ஸ்ரீவாரி சேவைகள், பரக்காமணி உண்டியல் காணிக்கை எண்ணிக்கை சேவைக்கான டிக்கெட்டுகள் 27ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கிடைக்கும். பக்தர்கள் தேவையான சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!