திருப்பூர் ஆயத்த ஆடைகளுக்கு புதிய சந்தை வாய்ப்புக்கள் ...!
பின்னலாடை தொழில் நகரான திருப்பூரில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி மதிப்பில் ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் 60 சதவீதம் அமெரிக்காவை நம்பியே இருந்த நிலையில், 50 சதவீத வரி விதிப்பை அந்த நாடு அறிவித்தது. இதனால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கடும் பின்னடைவை சந்தித்தனர். வர்த்தக பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும், இழப்பை ஈடு செய்ய மாற்று சந்தையை நோக்கி கவனம் திரும்பியுள்ளது.
இந்த சூழலில் திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு கைகொடுக்கும் வகையில் இந்தியா பல நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. வங்கதேசம், ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், தென்கொரியா, சுவிட்சர்லாந்து, மொரீசியஸ், ஐஸ்லாந்து, நார்வே உள்ளிட்ட 9 நாடுகளுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செயல்பாட்டில் உள்ளது. இங்கிலாந்துடன் கையெழுத்தாகும் ஒப்பந்தம் வரும் நிதியாண்டில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் ஓமன் நாட்டுடனும், 3 நாட்களுக்கு முன்பு நியூசிலாந்துடனும் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் நியூசிலாந்துக்கு இனி வரியில்லாமல் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்ய முடியும். ஓமன் நாட்டுக்கும் நேரடியாக 5 சதவீத வரி சலுகையுடன் ஏற்றுமதி வாய்ப்பு உருவாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகளுடன் வரவிருக்கும் ஒப்பந்தங்கள் மேலும் சாதகமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், அமெரிக்க சந்தை இழப்பை ஈடு செய்ய புதிய சந்தைகளை நோக்கி தீவிரமாக நகர்ந்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!