undefined

திருவண்ணாமலை மகா சிவராத்திரி... அண்ணாமலையார் கோவிலில் லட்சக்கணக்கில் அலைமோதிய பக்தர்கள்!

 

நேற்று மதியம் முதலே திருவண்ணாமலையில் பக்தர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியது. லட்சக்கணக்கான மக்கள் கிரிவலப் பாதையிலும், கோவில் பிரகாரங்களிலும் திரண்டனர்.

மகா சிவராத்திரியின் மிக முக்கிய நிகழ்வான 'லிங்கோத்பவ' தரிசனம் நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற்றது. நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை நான்கு காலங்களிலும் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

கருவறைக்கு பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு நள்ளிரவில் நடைபெற்ற மகா அபிஷேகத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர். இந்த ஆண்டு பக்தர்களுக்காக ஈசானிய திடலில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று மாலை 6 மணி முதல் இன்று அதிகாலை 6 மணி வரை இடைவிடாமல் பக்தி இசை கச்சேரிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஈசானிய திடலில் ராஜகோபுரம் மற்றும் திருவண்ணாமலை மலை வடிவில் தத்ரூபமான மணல் சிற்பங்கள் மற்றும் மின்விளக்கு அலங்காரங்கள் அமைக்கப்பட்டிருந்தது பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது. சிவன் மலையாகவே காட்சியளிக்கும் திருவண்ணாமலையில், நேற்று இரவு சுமார் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் பக்தர்கள் வெள்ளம் போலத் திரண்டனர்.

'அரோகரா' முழக்கத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டனர். கிரிவலப் பாதை முழுவதும் தன்னார்வலர்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

மாவட்ட நிர்வாகம் சார்பில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கிரிவலத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!