undefined

திருவண்ணாமலை மகாதீபம், கார்த்திகை பெளர்ணமி...  4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்... 9 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள்!

 

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை மகாதீபத் திருவிழாவை முன்னிட்டு, சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைச் சமாளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் இருந்து திருவண்ணாமலைக்கு 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பக்தர்களின் வசதிக்காக மொத்தம் 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்தச் சிறப்புப் பேருந்துகள் டிசம்பர் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும். மேலும், டிசம்பர் 4ஆம் தேதி பௌர்ணமி கிரிவலம் நடைபெறுவதையொட்டி, 5ம் தேதி வரை மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னை, தாம்பரம், விழுப்புரம், வேலூர், ஆரணி, சேலம், தருமபுரி, கோவை, ஈரோடு, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, கும்பகோணம், திருச்சி, கடலூர், புதுச்சேரி மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் இருந்து நேரடியாகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, சென்னையில் இருந்து மட்டும் 160 சொகுசு ஏசி பேருந்துகள் உட்பட நவீன பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

திருவண்ணாமலை நகரத்திற்குள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் விதமாகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவண்ணாமலை நகரத்தைச் சுற்றி 9 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்தத் தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவலப் பாதை மற்றும் கோயிலுக்குச் செல்ல, பக்தர்களின் தேவைக்கேற்ப பேருந்து வசதி மற்றும் 70 கட்டணமில்லா சிற்றுந்துகளும் இயக்கப்பட உள்ளன திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!