நெருங்குகிறது 'டிட்வா'.. இன்று மாலை கரையைக் கடக்கும்... இந்த மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை!

 

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள 'டிட்வா' புயல், வடதமிழகக் கடற்கரையை மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் புயல் இன்று (நவம்பர் 30) மாலை கரையைக் கடக்கத் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தற்போது 'டிட்வா' புயல் பின்வரும் இடங்களில் மையம் கொண்டுள்ளது: வேதாரண்யத்திலிருந்து: 110 கிலோமீட்டர் தொலைவில், சென்னையிலிருந்து: 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இந்தப் புயல் வடக்கு - வடமேற்குத் திசையில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. நாளை அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் வடக்கு ஆந்திரக் கடல் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக முக்கியமாக, புயல் கரையைக் கடக்கும் போது அதன் மையப்பகுதி சென்னை கடற்கரையில் இருந்து வெறும் 25 கிலோமீட்டர் தொலைவில் நிலவ வாய்ப்புள்ளது. நாளை (நவம்பர் 30) மாலை முதல் புயல் கரையைக் கடக்கத் தொடங்கும் என்றும், டிசம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலின் தீவிரம் காரணமாக, இன்று (நவம்பர் 30) நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ஐந்து மாவட்டங்களுக்குச் சிவப்பு நிற (Red Alert) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மேலும் நாளை (டிசம்பர் 1) திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் மிக கனமழை மற்றும் ஓரிரு இடங்களில் அதிகன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை நீடிக்க வாய்ப்புள்ளது. இன்றும் நாளையும் விட்டு விட்டுக் கனமழை பெய்யக்கூடும் என்றும், டிசம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு மழை படிப்படியாகக் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடக்கும்போது டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், வட தமிழகக் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!