நாளை தவெக பொதுக்கூட்டம் ... கர்ப்பிணிகள் , குழந்தைகளுக்கு அனுமதி இல்லை!
நாளை (டிசம்பர் 9, செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு புதுச்சேரி உப்பளத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கும் “புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு” நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தவெகவின் முதல் புதுச்சேரி பொதுக்கூட்டம் என்பதால் இந்த நிகழ்ச்சி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி காவல்துறையின் வழிகாட்டுதல்படி, QR குறியீடு கொண்ட நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 5,000 பேர் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும், எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை என்று தவெக தலைமை தெளிவாக அறிவித்துள்ளது. தலைவர் விஜய்யின் பாதுகாப்பில் எள்ளளவும் சமரசம் செய்யமாட்டோம் என்று கூறிய கட்சி, தமிழக தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. நிகழ்ச்சி முழுவதும் நேரலையாக ஒளிபரப்பப்படுவதால், தமிழக மக்கள் வீட்டிலிருந்தே காணலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விஜய்யின் பாதுகாப்பையும் நிகழ்ச்சியின் ஒழுங்கையும் கருதி கடும் வழிகாட்டு நெறிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை. வாகனங்களில் தலைவரைப் பின்தொடர்வது, போக்குவரத்துக்கு இடையூறு செய்வது, பிளக்ஸ் மற்றும் பேனர்கள் வைப்பது உள்ளிட்ட செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சி முடிந்தவுடன் அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டும் என்றும், சட்டம்-ஒழுங்கை காக்க அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தவெக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!