டி.என்.பி.எஸ்.சி. குரூப்–1ஏ... முதன்மைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் வெளியீடு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–1 மற்றும் குரூப்–1ஏ போட்டித்தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டால், tnpscexams.in இணையத்தளத்தின் மூலம் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.
குரூப்–1 மற்றும் குரூப்–1ஏ தேர்வுகளுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் 15-ஆம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து, முதன்மை எழுத்துத் தேர்வு டிசம்பர் 1 முதல் 4-ஆம் தேதி வரை மற்றும் டிசம்பர் 8 முதல் 10-ஆம் தேதி வரை முற்பகல் மட்டும் சென்னை மையங்களில் நடைபெறவுள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டவர்களின் ஹால்டிக்கெட்டுகள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் தங்களது ஒருமுறை பதிவேற்றம் (OTR Dashboard) வழியாக மட்டுமே ஹால்டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்ய வேண்டும் என்று தேர்வாணையம் வலியுறுத்தியுள்ளது. தேர்வுக்கான அனைத்து வழிமுறைகளும் ஹால்டிக்கெட்டில் வழங்கப்பட்டுள்ளதால், தேர்வர்கள் அவற்றை கவனமாகப் படித்து பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!