TNPSC குரூப் 2 & 2ஏ ஹால் டிக்கெட் வெளியீடு !
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான ஹால் டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது. தேர்வு பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்வர்களுக்கான அனுமதிச் சீட்டுகளை டிஎன்பிஎஸ்சி இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.
குரூப் 2 பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு இரண்டு தாள்களில் நடைபெற உள்ளது. முதல் தாள் (தமிழ் தகுதித் தாள்) பிப்ரவரி 8-ம் தேதி காலையில், இரண்டாம் தாள் (பொது அறிவு) பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறும். குரூப் 2ஏ பதவிகளுக்கான இரு தாள்களும் பிப்ரவரி 8-ம் தேதியில் நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in இணையதளங்கள் மூலம், அவர்களின் OTR (One Time Registration) விவரங்கள் – விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி – மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!