undefined

 குரூப்-2, 2ஏ தேர்வில் குளறுபடி; தமிழகம் முழுவதும் முதன்மைத் தேர்வு ஒத்திவைப்பு!

 
 

குரூப்-2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 828 காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு வெளியான அறிவிப்பை தொடர்ந்து நடைபெற்ற முதல்நிலைத் தேர்வில் 4.20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேர்வு முடிவில் குரூப்-2 பதவிகளுக்கு 1,126 பேரும், குரூப்-2ஏ பதவிகளுக்கு 9,457 பேரும் தகுதி பெற்றிருந்தனர்.

இன்று நடைபெறவிருந்த பாடத்தேர்வு மற்றும் தமிழ்த் தகுதித்தாள் தேர்வுகள், 38 மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சென்னை நந்தனம், அரும்பாக்கம் உள்ளிட்ட 7 மையங்களில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. சில மையங்களில் தேர்வு எண்கள் இல்லாதது, மையங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது, மேலும் ஒரு மையத்தில் வினாத்தாளே வரவில்லை என்ற புகார்கள் எழுந்தன. அரும்பாக்கம் தனியார் கல்லூரியில் 600 பேர் வந்த நிலையில் 200 பேருக்கு மட்டும் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த குளறுபடிகளை தொடர்ந்து முதலில் சென்னையில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பின்னர் தமிழகம் முழுவதும் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. புதிய தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வாணைய தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!