ராக்கெட் வேகத்தில் ஏறிய தங்கம்... சவரன் ரூ65000ஐ நெருங்கியது!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.கடந்த சில நாட்களாக தங்கத்தின்விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று கிராமுக்கு ரூ55உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ8120க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.64,960க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வாரத்தின் தொடக்க நாளான மார்ச் 10ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,400க்கும், ஒரு கிராம் ரூ.8,050க்கும் விற்பனை செய்யப்பட்டது. மார்ச் 11ம் தேதி சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.64,160க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,520க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று மார்ச் 13ம் தேதி ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ55 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ8120க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.64,960க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் தங்கம் மீண்டும் ரூ.65 ஆயிரத்தை நெருங்கி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!