undefined

 சட்டென குறைந்த தங்கம்... உச்சம் தொட்ட வெள்ளி! 

 
 

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கத்துடன் ரோலர் கோஸ்டர் போக்கில் காணப்படுகிறது. உலக சந்தை மாற்றங்கள், முதலீட்டாளர்களின் மனநிலை, பங்கு சந்தை அலைச்சல்கள் போன்றவை ஒவ்வொரு நாளும் விலை மாற்றத்துக்குக் காரணமாகின்றன. அக்டோபர் 17ஆம் தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற உச்சத்தை தொட்ட நிலையில், சில நாட்களுக்குள் அதே மாதம் 28ம் தேதியன்று ரூ.88,600 வரை சரிந்து அதிர்ச்சி கொடுத்தது. நவம்பரிலும் இதே அதிர்வுடன் விலை நகர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்த மாதம் 13ம் தேதி தங்கம் மீண்டும் ஏற்றம் கண்டது. ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தைக் கடந்த நிலையில், கடந்த சில நாட்களாக மெல்லக் குறைவு நோக்கி நகர்ந்தது. நேற்று கிராமுக்கு ரூ.80 அதிகரித்த நிலையில் ஒரு கிராம் ரூ.11,800, ஒரு சவரன் ரூ.94,400 என விற்கப்பட்டது. வெள்ளி விலையும் அன்றைய தினம் ரூ.2 உயர்ந்து கிராமுக்கு ரூ.176, கிலோவுக்கு ரூ.1,76,000 வடிவில் இருந்தது. ஆனால் இன்று சந்தை மீண்டும் திசைமாற, தங்கம் கிராமுக்கு ரூ.30, சவரனுக்கு ரூ.240 குறைந்து, கிராமுக்கு ரூ.11,770, ஒரு சவரன் ரூ.94,160 என்ற நிலைக்கு வந்துள்ளது.

தங்கத்துடன் ஒப்பிடும்போது, வெள்ளி இன்று உயர்வைக் கண்டுள்ளது. கிராமுக்கு ரூ.4, கிலோவுக்கு ரூ.4,000 உயர்ந்து தற்போது ஒரு கிராம் ரூ.180, ஒரு கிலோ ரூ.1,80,000 என விற்பனை செய்யப்படுகிறது. தினந்தோறும் மாறிக்கொண்டிருக்கும் விலை நிலவரத்தில், தங்கம் முதலீட்டாளர்களுக்கு இன்னும் கணிப்பதற்கு கடினமான சந்தையாகவே தொடர்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!