தடாலடியாக மீண்டும் உயர்ந்த தங்கம் விலை… புதிய உச்சத்தில் வெள்ளி !
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை எட்டிய தங்கம் விலை, அதன் பிறகு மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அமெரிக்கா – ரஷ்யா இடையிலான பதற்றம், ரஷ்யா – உக்ரைன் போர், இஸ்ரேல் – காஸா மோதல், சீனாவுடன் வர்த்தக போர் உள்ளிட்ட உலகளாவிய காரணங்கள் இதற்கு பின்னணி. பங்கு சந்தையில் இருந்து விலகிய முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்வு கண்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.99,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.12,480 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் கட்டுக்கடங்காமல் உயர்கிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.231-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து புதிய உச்சங்களை தொட்டு வரும் தங்கம் – வெள்ளி விலை, பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!