ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்… ரூ.1.02 லட்சம் தாண்டியது சவரன் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,02,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.12,770 ஆகியுள்ளது. நேற்று ரூ.1,360 உயர்ந்த நிலையில், இன்று அதைவிட கூடுதலாக உயர்வு கண்டது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கத்துடன் சேர்ந்து வெள்ளி விலையும் கட்டுக்கடங்காமல் ஏறி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.3 உயர்ந்து ரூ.234க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.3,000 உயர்ந்து ரூ.2.34 லட்சத்தை எட்டியுள்ளது. தங்கத்தை விட வேகமாக வெள்ளி விலை முன்னேறுவது சந்தையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிப்பதே விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை பெருமுதலீட்டாளர்கள் பார்க்க தொடங்கியுள்ளனர். போர் பதற்றம், உலக அரசியல் குழப்பம் மற்றும் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதம் குறைத்தது ஆகியவை தங்கம் விலையை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!