ஒரே நாளில் 2 வது முறையாக தங்கம் விலை திடீர் சரிவு… நகைப் பிரியர்கள் உற்சாகம் !
வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை, தற்போது சற்று நிம்மதி அளிக்கும் வகையில் குறைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து உயர்ந்த தங்கம் விலை, டிசம்பர் 15-ம் தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டது. எட்டு மாதங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.45 ஆயிரம் வரை உயர்ந்ததால், சாமானிய மக்கள் தங்கம் வாங்க முடியாத நிலை உருவானது.
கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு முதலீட்டாளர்கள் லாப நோக்கில் தங்கத்தை விற்பனை செய்ததால் விலை சரிவடைந்தது. டிசம்பர் 30-ம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,360 குறைந்து ரூ.1,00,800-க்கு விற்பனை ஆனது. கிராம் தங்கம் ரூ.12,600-க்கும், வெள்ளி கிராம் ரூ.258-க்கும் விற்கப்பட்டது.
இன்று (டிசம்பர் 31) தங்கம் விலை மேலும் சரிந்துள்ளது. சென்னையில் சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.99,840-க்கும், ஒரு கிராம் ரூ.12,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.257 ஆக உள்ளது. புத்தாண்டு முன்னிட்டு நாளை தங்கம் விற்பனை மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!