சட்டென சரிந்த தங்கம்.... நகைப் பிரியர்கள் உற்சாகம்!
தங்கம் விலை சமீப நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த டிசம்பர் 31-ம் தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது. அதன் பின்னர் விலை மேலும் சரிந்தது.
நேற்று தங்கம் விலை உயர்வு கண்டது. கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,580-க்கும், ஒரு சவரன் ரூ.1,00,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த உயர்வு நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,00,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.12,520 ஆக உள்ளது. வெள்ளி விலையும் குறைந்து, ஒரு கிராம் ரூ.256-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 56 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!