undefined

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை... காரைக்காலில் விடிய விடிய கனமழை... கல்வி அமைச்சர் அறிவிப்பு!

 

தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியின் ஒரு பகுதியான காரைக்காலில், கடந்த சில தினங்களாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்து வரும் கனமழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

தொடர் மழையினால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, காரைக்கால் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று (ஜனவரி 13, 2026, செவ்வாய்க்கிழமை) ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து புதுச்சேரி கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் எனத் தெரிகிறது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று காரைக்கால் மற்றும் தென்தமிழகக் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை (போகிப் பண்டிகை) முதல் மழை படிப்படியாகக் குறைந்து, பொங்கல் நாட்களில் வறண்ட வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!