undefined

இன்று அனல் பறக்கும் பலப்பரீட்சை... டி20 தொடர் யாருக்கு? இந்தியா - தென்ஆப்பிரிக்கா மோதும் 3வது ஆட்டம்! 

 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்கக் கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில், இந்தத் தொடரில் யார் முன்னிலை பெறப் போகிறார்கள் என்பதைத் தீர்மானிக்கும் 3-வது டி20 போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

கட்டாக்கில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனால், நியூசண்டிகாரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதனால், சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும் மோதும் இந்த 3-வது ஆட்டம், இமாசலப்பிரதேச மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் (தர்மசாலா) இன்று இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது.

முந்தைய போட்டியில் 213 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 162 ரன்களில் அடங்கித் தோல்வியைத் தழுவியது. திலக் வர்மா (62 ரன்) தவிரப் பேட்டிங்கில் யாரும் சோபிக்கவில்லை. அதிரடி ஆட்டக்காரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருவது பின்னடைவாக உள்ளது. பந்துவீச்சிலும், வேகப்பந்து வீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அதிக ரன்களை வாரி வழங்கியது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்த இருவரும் தங்கள் திறமையை நிரூபித்து, விமர்சனத்துக்கு விடைகொடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.

கடந்த ஆட்டத்தில் பெற்ற வெற்றியால் மிகுந்த நம்பிக்கையுடன் களம் காணும் தென்ஆப்பிரிக்க அணியில், குயின்டான் டி காக், மார்க்ரம், டிவால்ட் பிரேவிஸ், டேவிட் மில்லர் உள்ளிட்டோர் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கின்றனர். பந்துவீச்சில் லுங்கி இங்கிடி, ஓட்னில் பார்த்மேன் ஆகியோர் வலுசேர்க்கின்றனர். 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 33 ஆட்டங்களில் ஆடி 13 வெற்றிகளைப் பெற்றுள்ள தென்ஆப்பிரிக்கா இந்த வெற்றியுடன் உற்சாகத்தில் உள்ளது.

இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஜிதேஷ் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்‌ஷர் பட்டேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், ரீஜா ஹென்ரிக்ஸ், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டிவால்ட் பிரேவிஸ், டோனோவன் பெரேரா, டேவிட் மில்லர், ஜார்ஜ் லின்டே, மார்கோ யான்சென், லுதோ சிபாம்லா, லுங்கி இங்கிடி, ஓட்னில் பார்த்மேன். இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!