இன்று கார்த்திகை பிரதோஷம்... தஞ்சை பெரியகோவில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

 

இன்று கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிடு தஞ்சை பெரியகோவிலில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட உள்ளது. இன்றளவில் ஓங்கி உயர்ந்து தமிழர்களின் கட்டிடக் கலை மற்றும் உலக பாரம்பரியத்தில் முக்கிய இடம் வகிக்கும் கோவிலாக அறியப்படும் தஞ்சை பெரிய கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

இன்று மாலை மகாநந்தி எம்பெருமானுக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட உள்ள நிலையில், பெரிய நந்திக்கு அபிஷேகம் செய்யப்படுவதைப் பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதன் காரணமாக வெளியூரில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் இன்றைய தினம் தஞ்சை பெரிய கோவிலில் குவிந்து, அபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர்.

தஞ்சை பெரியகோவிலில் இந்த பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் மிகவும் உற்சாகமாக அதிகளவில் பங்கேற்று வழிபாடு செய்கின்றனர். அபிஷேகத்தின் போது நந்தியெம்பெருமானின் சிறப்பான தோற்றம் பக்தர்களை கவர்ந்தது. பலர் நேரடியாக தரிசனம் செய்து, விரதங்கள் செய்து ஆன்மீக அனுபவத்தை பெறுகின்றனர்.

அதே நேரத்தில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலும் இன்று மாலை பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. திருவண்ணாமலையில் ஆயிரங்கால் மண்டபம் அருகே அமைந்துள்ள பெரிய நந்தியம் பெருமானுக்கு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது . நாளை மகா தீபத்தையொட்டி திருவண்ணாமலையில் பக்தர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களிலும் இன்று பிரதோஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் விரதங்கள் இருந்து, வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!