இன்று காரடையான் நோன்பு... தாலி சரடு மாற்றும் போது இந்த மந்திரத்தைச் சொல்ல மறக்காதீங்க.. விரதமுறையும், பலன்களும்!

 

இன்று தீர்க்க சுமங்கலி வரம் தரும் காரடையான் நோன்பைக் கொண்டாடி வருகின்றனர். மாங்கல்ய பலம் தரும் சக்தி வாய்ந்த விரதமாக காரடையான் நோன்பு பார்க்கப்படுகிறது.

திருமணமான பெண்கள் தங்களது கணவரின் நீண்ட ஆயுள் மற்றும் குடும்ப நலன் வேண்டி கடைப்பிடிக்கும் முக்கியமான விரதம் காரடையான் நோன்பு என்பது. சாவித்திரி தனது கணவரின் உயிரை காரடையான் நோன்பு இருந்தே எமனிடம் இருந்து மீட்டதாகக் கூறப்படும் புராணக் கதையை நினைவுகூர்ந்து இந்த நோன்பு அனுஷ்டிக்கப்படுகிறது. குடும்பத்தில் ஒற்றுமை, செல்வ வளம் பெருக வேண்டும் என்பதற்காக பெண்கள் இந்த விரதத்தை கடைப்பிடிப்பது வழக்கமாக உள்ளது.

மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் தொடங்கும் நாளில் இந்த நோன்பு அனுஷ்டிக்கப்படுகிறது. திருமணமான பெண்கள் கணவரின் கைகளால் கழுத்தில் மஞ்சள் சரடு கட்டிக் கொண்டு விரதம் இருப்பார்கள். திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டும் என்று கைகளில் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டு வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டில் மார்ச் 14 அன்று இந்த நோன்பு அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த நாளில் பெண்கள் அதிகாலையில் எழுந்து குளித்து விரதத்தை தொடங்க வேண்டும். வீட்டில் அம்மன் முன் விளக்கு ஏற்றி மஞ்சள் சரடை வைத்து வேண்டுதல் செய்ய வேண்டும். இனிப்பு அடை, கார அடை, வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம், உருகாத வெண்ணெய் ஆகியவற்றை சமர்ப்பித்து வழிபாடு நடத்துவர். பின்னர் மஞ்சள் சரடை கழுத்தில் கட்டிக் கொண்டு விரதத்தை நிறைவு செய்வது வழக்கமாக உள்ளது.

தாலி சரடு மாற்றும் போதும், வழிபாட்டின் போதும் சொல்ல வேண்டிய மந்திரம் :

1. உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன்

ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்.

2. தோரம் க்ருஹ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்

பர்துஹு ஆயுஷ்ய ஸித்யர்த்தம் சுப்ரீதா பவ ஸர்வதா

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!