இன்றே கடைசி.. டிகிரி முடிச்சிருந்தா ரூ.53,600 சம்பளத்தில் எல்.ஐ.சி.யில் வேலை வாய்ப்பு! 

 

டிகிரி முடிச்சிருந்தா போதும்.. ரூபாய் 53,600 சம்பளத்தில் எல்ஐசி நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கு. இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தினம். மொத்தம் 300 உதவி நிர்வாக அலுவலர் பணியிடத்திற்கு இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்ப செயல்முறை இன்றுடன் நிறைவு பெறுகிறது. மிஸ் பண்ணாம உடனடியா இந்த தேர்வுக்கு விண்ணப்பிச்சுடுங்க.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்திய அரசுக்கு சொந்தமான ஒரு காப்பீட்டுக் குழுமம் மற்றும் முதலீட்டு நிறுவனம் எல்ஐசி. இது இந்தியாவின் மிக பெரிய காப்பீட்டு நிறுவனமாக திகழ்கிறது. இந்த நிலையில், எல்ஐசி நிறுவனம் அறிவித்த 300 உதவி நிர்வாக அலுவலர் (Assistant Administrative Officer) பணியிடத்திற்கான விண்ணப்ப செயல்முறை இன்றுடன் முடிவடைகிறது. எனவே, இளைஞர்கள் காலம் தாழ்த்தாமல் போதிய கால அவகாசம் இருக்கும் போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பதவி: உதவி நிர்வாக அலுவலர்

காலியிடங்கள்: 300

கல்வித் தகுதி: பி.ஏ/ பி.எஸ்சி /பிகாம் போன்ற இளநிலைப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு:  01/01/2023 அன்று 21 முதல் 30 வருடங்களாக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர் 02/01/1993 தேதிக்கு முன்பு அல்லது 01/01/2002 தேதிக்கு பிறகு பிறந்திருக்கக் கூடாது.இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்

சம்பளம்: ரூ. 53,600

தேர்வு முறை: தேர்வு முறை மூன்று நிலைகளைக் கொண்டது. முதல்நிலைத் தேர்வில் (Preliminary Examination) தகுதி பெற்ற தேர்வர்கள் முதன்மைத் தேர்வுக்கு (Main Examination) அனுமதிக்கப்படுவார்கள். முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி:  இன்றைக்குள் (31-01-2023)  விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இணைய தள முகவரி licindia.in ஆகும். முகப்பு பக்கத்தில், (ஆட்தேர்வு (careers) > Recruitment of AAO(Generalist) 2023 என்ற இணைப்பு வழியே) விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.700 ஆகும். பட்டியல் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள், அணைத்து பிரிவுகளையும் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!