undefined

இன்று கடைசி தேதி... மறந்துடாதீங்க... ஐடிஆர் தாக்கல் செய்ய தவறினால் அபராதம் உறுதி! 

 

இன்றுடன் காலகெடு நிறைவு.. மறந்துடாதீங்க. 2023-24 நிதியாண்டில் ஈட்டிய வருமானத்திற்காக, வருமான வரித் தாக்கல் (ITR) செய்யத் தவறியவர்களுக்கும், தாக்கல் செய்ததில் பிழை உள்ளவர்களுக்கும் இன்று டிசம்பர் 31ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படாது என்பதால், வரி செலுத்துவோர் விரைந்து செயல்படுவது அவசியம்.

வருமான வரிச் சட்டத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டும். அந்தத் தேதியைத் தவறவிட்டவர்கள், பிரிவு 139(4)-ன் கீழ் 'பிந்திய வருமான வரித் தாக்கல்' செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கான இறுதித் தேதி தான் டிசம்பர் 31. ஏற்கனவே வரி தாக்கல் செய்தவர்கள், அதில் வருமானம், விலக்குகள் அல்லது வங்கி விவரங்களில் தவறு செய்திருந்தால், பிரிவு 139(5)-ன் கீழ் அதைச் சரிசெய்ய முடியும். இதற்கும் டிசம்பர் 31-மே கடைசி நாளாகும்.

காலக்கெடுவுக்குப் பின் தாக்கல் செய்பவர்களுக்கு வருமான வரிச் சட்டம் 234F பிரிவின் கீழ் அபராதம் விதிக்கப்படுகிறது. மொத்த வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் ரூ.5,000 அபராதம். மொத்த வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் ரூ.1,000 அபராதம். அடிப்படை விலக்கு வரம்பிற்குள் வருமானம் இருப்பவர்களுக்கு அபராதம் கிடையாது (சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு).

நஷ்டத்தைக் கணக்குக் காட்ட முடியாது:

ஜூலை 31-க்குள் தாக்கல் செய்யாதவர்கள், வணிகம் அல்லது பங்குச்சந்தையில் ஏற்பட்ட நஷ்டங்களை அடுத்தடுத்த ஆண்டுகளுக்குக் கொண்டு செல்ல முடியாது. ஆனால், வீட்டுச் சொத்து மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை மட்டும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும்.

வட்டி அபராதம்: வரி செலுத்த வேண்டியது இருந்து, அதைத் தாமதமாகச் செலுத்தினால், நிலுவைத் தொகைக்கு மாதத்திற்கு 1% வட்டி (பிரிவு 234A-ன் கீழ்) கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

வரி தாக்கல் செய்யத் தேவையான ஆவணங்கள்: பான் (PAN) மற்றும் ஆதார் கார்டு, சம்பளம் பெறுபவர்களுக்கு படிவம் 16 (Form 16) தேவையானது. உங்கள் வருமானம் மற்றும் வரிப் பிடித்தம் (TDS) குறித்த முழு விவரங்களைச் சரிபார்க்க படிவம் 26AS மற்றும் AIS மிக அவசியம். வங்கி சேமிப்புக் கணக்கு வட்டி மற்றும் இதர வருமான விவரங்கள்.

தாக்கல் செய்யாவிட்டால் என்ன நடக்கும்?

இன்று நீங்கள் இந்த பணியை செய்ய தவறவிட்டால், வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் வர வாய்ப்புள்ளது. மேலும், வருமான வரிச் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான அபராதங்கள் அல்லது வழக்குத் தொடரப்படவும் வாய்ப்புள்ளது. மிக முக்கியமாக, அதிக வருமானம் ஈட்டுபவர்கள் வரித் தாக்கல் செய்யாமல் இருந்தால், வருங்காலத்தில் வங்கி லோன் அல்லது விசா பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும்.

தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர்க்கவும், கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கவும் இன்றே உங்களது ITR-ஐத் தாக்கல் செய்வது சிறந்தது. வரி செலுத்துவது நமது கடமை மட்டுமல்ல, அது நமது நிதி ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!