இன்று 450 சவரன் தங்க அங்கியில் ஜொலிஜொலிக்கும் ஐயப்பன்... சபரிமலையில் மண்டல பூஜை!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல சீசனின் மிக முக்கிய நிகழ்வான மண்டல பூஜை இன்று (டிசம்பர் 27, 2025) நடைபெறுகிறது. 450 சவரன் தங்க அங்கி அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.
மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 450 சவரன் எடையுள்ள தங்க அங்கி, திருவிதாங்கூர் மகாராஜாவால் வழங்கப்பட்டதாகும். இந்த அங்கி பத்தனம்திட்டா ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து கடந்த 23-ம் தேதி ஊர்வலமாகப் புறப்பட்டது. நேற்று மாலை பம்பையை வந்தடைந்த தங்க அங்கிக்கு, பக்தர்கள் மற்றும் தேவஸ்தானம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், மேளதாளங்கள் முழங்க சன்னிதானத்திற்குக் கொண்டு வரப்பட்ட தங்க அங்கியைத் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு பெற்றுக்கொண்டார்.
நேற்று மாலை 6:15 மணி அளவில் ஐயப்பனுக்குத் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தங்க அங்கி அலங்காரத்தில் ஜொலித்த ஐயப்பனைக் காணச் சன்னிதானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மண்டல பூஜையின் முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு நடைபெறுகின்றன:
இன்று காலை 10:10 மணி முதல் 11:30 மணி வரை சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல சிறப்பு பூஜை நடைபெறும். பூஜையின் ஒரு பகுதியாக ஐயப்பனுக்குச் சிறப்புப் பிரசன்ன கலசாபிஷேகம் செய்யப்படும்.
இன்று இரவு மண்டல பூஜைகள் முடிவடைந்ததும் நடை அடைக்கப்படும். மீண்டும் மகரவிளக்கு பூஜைகளுக்காக வரும் டிசம்பர் 30-ம் தேதி மாலை நடை திறக்கப்படும். புகழ்பெற்ற மகரஜோதி தரிசனம் ஜனவரி 14, 2026 அன்று நடைபெற உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!