ஸ்கூலுக்கு கிளம்புங்க... தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது!
டிட்வா புயலின் தாக்கத்தால் இடைவேளையின்றி பெய்த மழை, பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே பள்ளி திறக்குமா? என்ற குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையிலேயே, இன்று (டிசம்பர் 6) சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 2 முதல் 4 வரை பல மாவட்டங்களில் தொடர்ச்சியான கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்று கூட மழை எச்சரிக்கை நீடிப்பதால், மீண்டும் விடுமுறை அளிக்கப்படுமா என்று பலரும் எதிர்பார்த்தனர். எனினும், வானிலை சற்றே சீராகி வருவதாலும், மாணவர்களின் பாடத்திட்டத் தடையை தவிர்க்க வேண்டுமென்றும் கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது.
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட குறிப்பில், இந்த வாரத்தில் மழை காரணமாக மூன்று நாள் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டதாகவும், அதனை ஈடு செய்ய இன்று (டிசம்பர் 6) உயர்நிலை மற்றும் உயர்மேல்நிலை பள்ளிகள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை நிவர்ந்ததால் பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப் படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!