undefined

வாகன ஓட்டிகளே உஷார்... நாடு முழுவதும்  சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1 முதல்  ரொக்கப் பணம் நிறுத்தம்?  

 

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ரொக்கமாக கட்டணம் செலுத்துவதை ஏப்.1 முதல் நிறுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து National Highways Authority of India அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முழுமையான டிஜிட்டல் கட்டண முறையை அமல்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

புதிய நடைமுறை அமலுக்கு வந்தால், அனைத்து சுங்கச் சாவடிகளிலும் FASTag அல்லது UPI மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும். தற்போது 98 சதவீதத்திற்கும் அதிகமான வாகனங்களில் FASTag பயன்பாடு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு வசூல் முறையை வலுப்படுத்தி, சுங்கச் சாவடிகளில் நெரிசலை குறைப்பதே இந்த முடிவின் நோக்கமாகும்.

தமிழகத்தில் 78 சுங்கச் சாவடிகள் இயங்கி வருகின்றன. நாடு முழுவதும் 1,063 சுங்கச் சாவடிகளில் தினசரி பல கோடி ரூபாய் வசூலாகிறது. கடந்த 5 ஆண்டுகளில் அதிக வசூல் செய்த சாவடிகளில் தமிழ்நாட்டின் தோப்பூர் சுங்கச் சாவடி ரூ.1,124 கோடி வசூலுடன் 8-வது இடத்தில் உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!