தக்காளி விலை சரிவு… சாலையோரத்தில் கொட்டும் நிலை!

 
 

சைவம், அசைவம் என அனைத்து வகை உணவுகளிலும் முக்கிய இடம் பெறும் தக்காளிக்கு எப்போதும் தேவை இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிடுகின்றனர். ஆனால் சில நேரங்களில் விளைச்சல் அதிகரிப்பால் விலை கடுமையாக சரிந்து விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு தக்காளி கிலோ ரூ.100 வரை விற்பனையாகிய நிலையில், தற்போது விலை வீழ்ச்சி விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் தென்னம்பாளையம் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் வரத்து ஆகிறது. கடந்த மாதம் கிலோ ரூ.50 வரை விற்பனையான தக்காளி, தற்போது தரத்தைப் பொறுத்து 5 முதல் 10 கிலோ வரை ரூ.100க்கு விற்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வரத்து அதிகரித்ததால் தக்காளி விற்பனை குறைந்து வருகிறது.

விற்பனை ஆகாத தக்காளிகள் அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் கூடை, கூடையாக தக்காளிகளை மார்க்கெட் அருகே உள்ள ஓடைகளில் கொட்டிவருகின்றனர். வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்னும் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!