பரணி தீபம்... கிரிவல பாதையில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம்... 22 வருடங்களாக நெகிழ வைக்கும் கிராம மக்கள்!

 

தொடர்ந்து 22 வருடங்களாக திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், பரணி தீப நாளில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கி வருகின்றனர் வளவனூர் அருகே உள்ள குமாரகுப்பம் கிராம மக்கள். இம்முறை 50,000 லட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். பக்தர்களுக்கு லட்டுப் பிரசாதம் வழங்குவதால் குடும்ப நலமும், வளமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இப்பணியை தொடர்ந்து செய்து வருவதாக தெரிவித்தனர். 

கார்த்திகை தீபம் திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கியிருந்த நிலையில், பரணி தீபம் 3ம் தேதி அதிகாலை கருவறையில் ஏற்றப்பட்டு, மாலை 2,668 அடி உயர அண்ணாமலை மலையில் மகா தீபம் ஏற்றப்படும். தீபத்தை தரிசிப்பது வாழ்க்கை பூரணத்திற்கும், முக்திக்கும் வழிகாட்டும் என பக்தர்கள் நம்புவதால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் திருவண்ணாமலையில் கூடுகின்றனர். இந்த முறை பெரும் திரளான பக்தர்கள் வருகை எதிர்பார்க்கப்படுவதால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு, வழிபாடு சீராக நடைபெற பல்வேறு அனுசரணைகள் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்களின் நலனுக்காக 9 முக்கிய சாலைகளிலும், 24 தற்காலிக பேருந்து நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 130க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன நிறுத்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், வடக்கு மண்டல ஐஜி தலைமையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். கோவிலுக்குள் இலவச மற்றும் சிறப்பு தரிசனத்திற்காக 114 பகுதிகளில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதோடு, கிரிவலப்பாதை முழுவதும் 1,060 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு வலுவாக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!