undefined

நாளை கடைசி தேதி... தமிழக அரசில் 1083 காலிப் பணியிடங்கள்! உடனே அப்ளை பண்ணுங்க!

 

மிஸ் பண்ணாதீங்க மக்களே... நாளை மார்ச் 4ம் தேதி கடைசி தேதி. மொத்தம் 1083 காலி பணியிடங்கள். அரசு வேலை பெறுவதற்கு இந்த வாய்ப்பை  மிஸ் பண்ணாதீங்க. இதுவரை இந்த காலி பணியிடங்களுக்கு அப்ளை பண்ணலைன்னா உடனே அப்ளை பண்ணுங்க. படிப்படியாக மாதம் ரூ.1.30 லட்சம் வரை சம்பளம் உயர வாய்ப்பு.  உடனே ஆர்வமுடன் அப்ளை பண்ணுங்க. டிஎன்பிஎஸ்சியின் இந்த புதிய அறிவிப்பை அலட்சியப்படுத்தாமல், தகுதியும், ஆர்வமும் இருந்தால் இந்த 1,083 காலி பணியிடங்களில், உங்களுக்கான வேலையும் சேர்ந்தே இருக்கலாம். 

நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி துறை, நகர் ஊரமைப்பு ஆகிய துறைகளில் காலியாக இருக்கும் 1,083 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தகுதியும், ஆர்வமும் இருந்தா நிச்சயமாக கிடைக்க வாய்ப்பிருக்கு. இந்த தேர்வு வரும் மே 27ம் தேதி நடைபெற இருக்கு. 

மொத்த பணியிடங்கள் : 1083 

பணி விவரம்:

  • பணி மேற்பார்வையாளர்  / இளநிலை வரைத்தொழில் அலுவலர்  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - 794 
  • இளநிலை வரைத்தொழில் அலுவலர் - நெடுஞ்சாலைத் துறை - 236 
  • இளநிலை வரைத்தொழில் அலுவலர் - பொதுப்பணித் துறை - 18 
  • வரைவாளர், நிலை-III - நகர் ஊரமைப்பு துறை  - 18 
  • முதலாள், நிலை-II - தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத் துறை - 25 

கல்வித் தகுதி: 

  • பணி மேற்பார்வையாளர்  / இளநிலை வரைத்தொழில் அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க சிவில் பிரிவில் பொறியியல் படித்திருக்க வேண்டும்.
  • இளநிலை வரைத்தொழில் அலுவலர் பணிக்கு சிவில் பொறியியல் துறையில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • இளநிலை வரைத்தொழில் அலுவலர் - பொதுப்பணித் துறையில் பொறியியல் துறையில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி  அல்லது Architectural Assistantship பிரிவில் டிப்ளமோவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • வரைவாளர் பணிக்கு தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற  Town and Country Planning படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • முதலாள், நிலை-II பணிக்கு விண்ணப்பிக்க மெக்கானிக்கல் பொறியியலில் இளங்கலை அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு:

சம்பள விவரம்: 

  • பணி மேற்பார்வையாளர் / இளநிலை வரைத்தொழில் அலுவலர்  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - ரூ.35,400-1,30,400/- 
  • இளநிலை வரைத்தொழில் அலுவலர் - நெடுஞ்சாலைத் துறை - ரூ.35,400-1,30,400/-
  • இளநிலை வரைத்தொழில் அலுவலர் - பொதுப்பணித் துறை -ரூ.35,400-1,30,400/-
  • வரைவாளர், நிலை-III - நகர் ஊரமைப்பு துறை  - ரூ.35,400-1,30,400/-
  • முதலாள், நிலை-II - தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத் துறை - ரூ.19500-71900/-

விண்ணப்பக் கட்டணம்: 

நிரந்தரப் பதிவுக்கட்டணம் - ரூ.150

தேர்வுக் கட்டணம் - ரூ.100 

ஒரு முறை பதிவு/ நிரந்தரப்பதிவு:

விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக்கட்டணமாக ரூ.150 (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறை பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.

எழுத்துத் தேர்வு மையங்கள்:

இந்தப் பணியிடத்திற்கான தேர்வு சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு எழுத்துத் தேர்வு, கணினி வழி தேர்வு ,நேர்காணல்/ வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையங்கள் : 

சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், காஞ்சிபுரம், மதுரை, நாகர்கோவில், உதகமண்டலம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், காரைக்குடி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். 

எப்படி விண்ணப்பிப்பது?

www.tnpscexams.in / www.tnpsc.gov.in ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.03. 2023

இது தொடர்பான  முழு விவரத்திற்கு அறிவிப்பின் https://www.tnpsc.gov.in/Document/english/05_2023_CESSE_ENG.pdf-என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?