நாளை கடைசி தேதி... அரசு ஊழியர்கள் ஓய்வூதிய திட்டத்தில் சேர உடனே விண்ணப்பியுங்க!
நாளை கடைசி தேதி.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க. மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர விரும்பினால், 2025 நவம்பர் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள சந்தாதாரர்கள், சிஆர்ஏ முறைமை வழியாக ஆன்லைனில் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.
விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அவற்றின் அச்சு நகலை சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு வழங்க வேண்டியது கட்டாயம். இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வு செய்யும் ஊழியர்கள், வரிவிலக்கு மற்றும் ஓய்வுபயன்கள் உள்ளிட்ட பல நன்மைகள் பெற முடியும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், பணி விலகல் அல்லது கட்டாய ஓய்வுபெறும் சூழ்நிலையிலும் இந்த திட்டம் பயனுள்ளதாக அமையும்.
இத்திட்டத்தைத் தேர்வு செய்தவர்களுக்கு, எதிர்காலத்தில் மீண்டும் தேசிய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஓய்வூதிய நன்மைகள் குறித்து ஊழியர்களிடையே பேரார்வம் அதிகரித்து வரும் நிலையில், இந்த காலக்கெடு அறிவிப்பு முக்கியத்துவம் பெற்று உள்ளது. கடைசி தேதி நெருங்குவதால், விருப்பமுள்ள அரசு ஊழியர்கள் தாமதமின்றி விண்ணப்பிக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!