undefined

நாளை செல்வம் தரும் வழிபாடு... விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் வழிபடுவது எப்படி?!

 

நாளை விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் எப்படி வழிபட்டால் அஷ்டலட்சுமி கடாட்சம் பெறலாம் என்று தெரிஞ்சுக்கலாம் வாங்க. பொதுவாக சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் சங்கராந்தி காலங்களில், நிலை ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகளில் சூரியன் பிரவேசிக்கும் காலமே விஷ்ணுபதி புண்ணியகாலம் எனப்படுகிறது. தற்போது சூரியன் கும்ப ராசியில் பிரவேசிப்பதால் இந்த வழிபாடு சிறப்பானது.

நாளை அதிகாலை பிரம்ம முகூர்த்தம் முதல் சூரிய உதயம் வரையிலான காலம் வழிபாட்டிற்கு மிகவும் ஏற்றது. இந்த நேரத்தில் மகாவிஷ்ணுவை நினைத்து தியானிப்பதும், மந்திரங்களை உச்சரிப்பதும் சிறந்தது. அதிகாலையிலேயே நீராடி, தூய்மையான ஆடை அணிந்து இல்லத்தில் உள்ள விஷ்ணு படம் அல்லது சிலைக்கு துளசி மாலை அணிவிக்க வேண்டும்.

மகாவிஷ்ணுவின் சன்னதியிலோ அல்லது உங்கள் பூஜை அறையிலோ நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சர்க்கரைப் பொங்கல், பாயசம் அல்லது கற்கண்டு சாதம் போன்ற இனிப்பு வகைகளை நிவேதனமாகப் படைக்கலாம். "ஓம் நமோ நாராயணாய" எனும் அஷ்டாட்சர மந்திரத்தையும், விஷ்ணு சகஸ்ரநாமத்தையும் பாராயணம் செய்வது மிகுந்த பலனைத் தரும்.

தீராத கடன் தொல்லைகளில் இருப்பவர்கள் இந்த புண்ணியகாலத்தில் விஷ்ணுவை வேண்டிக்கொண்டால், பொருளாதாரச் சிக்கல்கள் நீங்கும். மகாலட்சுமியின் அருள் கிடைத்து, இல்லத்தில் அஷ்டலட்சுமி கடாட்சம் பெருகும். சுப காரியத் தடைகள் நீங்கி, புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும்.

தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கி, மன அமைதி கிடைக்கும் என நம்பப்படுகிறது. இந்த புண்ணியகாலத்தில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வதும், பசுக்களுக்கு அகத்திக்கீரை வழங்குவதும் பித்ருக்களின் ஆசியைப் பெற்றுத் தரும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!